App பதிவிறக்க

முகப்பு › பண்டிகைகள் 2026 › தீபாவளி 2026

தீபாவளி 2026: தேதி, நேரம்

Deepavali 2026: November 8, 2026. Date, timings and how it is celebrated.

தீபாவளி 2026: தேதி, நேரம் சென்னை நேரம்

தீபாவளி8 நவம்பர் 2026, ஞாயிற்றுக்கிழமை
நரக சதுர்த்தசி திதி8 நவ. 11:28 AM வரை
எண்ணெய் குளியல் (கங்கா ஸ்நானம்)அதிகாலை, சூரிய உதயம் 6:04 AM-க்கு முன்
அமாவாசை8 நவ. 11:28 AM முதல் 9 நவ. 12:31 PM வரை
லட்சுமி குபேர பூஜை8 நவம்பர் மாலை, அஸ்தமனம் 5:40 PM-க்குப் பின்
நல்ல நேரம்6:04 AM – 8:58 AM, 10:25 AM – 2:46 PM
ராகு காலம்4:13 PM – 5:40 PM

தீபாவளி எப்படிக் கொண்டாடுவது

2026 தீபாவளி நவம்பர் 8, ஞாயிற்றுக்கிழமை. தமிழ்நாட்டில் நரக சதுர்த்தசி அன்று அதிகாலையே தீபாவளி. இந்த ஆண்டு சதுர்த்தசி திதி 8-ம் தேதி காலை 11:28 வரை இருப்பதால், எண்ணெய் குளியலும் கொண்டாட்டமும் அன்றே.

கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த நாளாகத் தீபாவளி கொண்டாடப்படுகிறது. அதிகாலை எழுந்து நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதை "கங்கா ஸ்நானம்" என்பார்கள். பிறகு புத்தாடை, இனிப்பு, பட்டாசு, உறவினர் வீடுகளுக்குச் செல்லுதல்.

அதே நாள் மதியம் முதல் அமாவாசை தொடங்குகிறது. மாலையில் வீடு முழுவதும் விளக்கேற்றி லட்சுமி, குபேர பூஜை செய்வது பல குடும்பங்களின் வழக்கம். கேதார கௌரி விரதமும் இதே நாள்.

நேரங்கள் சென்னை சூரிய உதயப்படி, திருக்கணித முறை. உங்கள் ஊருக்கு அன்றைய நாள் பக்கத்தில் ஊரைத் தேர்ந்தெடுங்கள். கோயில் நிகழ்ச்சி நேரங்களைக் கோயில் அறிவிப்பில் உறுதி செய்யுங்கள்.

தீபாவளி போன்ற விசேஷ நாட்களுக்கு முந்தைய நாள் நினைவூட்டல்: TamilQ app, இலவசம். Google Play-ல் பதிவிறக்கவும்