App பதிவிறக்க

முகப்பு › பண்டிகைகள் 2027 › தைப்பொங்கல் 2027

தைப்பொங்கல் 2027: தேதி, நேரம்

Pongal 2027: January 15, 2027. Date, timings and how it is celebrated.

தைப்பொங்கல் 2027: தேதி, நேரம் சென்னை நேரம்

போகி14 ஜனவரி 2027, வியாழக்கிழமை
தைப்பொங்கல் (தை 1)15 ஜனவரி 2027, வெள்ளிக்கிழமை
மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம்16 ஜனவரி 2027, சனிக்கிழமை
காணும் பொங்கல்17 ஜனவரி 2027, ஞாயிற்றுக்கிழமை
தை மாதப் பிறப்பு (மகர சங்கராந்தி)14 ஜன. 9:06 PM
பொங்கல் வைக்க நல்ல நேரம் (காலை)6:35 AM – 8:00 AM, 9:26 AM – 10:52 AM
ராகு காலம் (தவிர்க்கவும்)10:52 AM – 12:18 PM
எமகண்டம்3:09 PM – 4:35 PM

தைப்பொங்கல் எப்படிக் கொண்டாடுவது

சூரியன் மகர ராசியில் நுழையும் தை மாத முதல் நாள் தைப்பொங்கல்; உழவர்கள் சூரியனுக்கு நன்றி சொல்லும் அறுவடைத் திருநாள். 2027-ல் சூரியன் ஜனவரி 14 இரவு 9:06-க்கு மகர ராசியில் நுழைவதால், தை 1 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை.

போகி அன்று பழையன கழித்து வீட்டைச் சுத்தம் செய்து காப்புக் கட்டுவார்கள். பொங்கல் அன்று வாசலில் கோலம், புதுப் பானையில் பால் பொங்கவைத்து "பொங்கலோ பொங்கல்" என்று சொல்லி, சர்க்கரைப் பொங்கல், கரும்பு, மஞ்சள் கொத்துடன் சூரியனுக்குப் படையல். ராகு காலம், எமகண்டம் தவிர்த்து நல்ல நேரத்தில் பொங்கல் வைப்பது வழக்கம்.

மறுநாள் மாட்டுப் பொங்கல்: மாடுகளைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் பூசி வழிபாடு. அதே நாள் திருவள்ளுவர் தினம். நான்காம் நாள் காணும் பொங்கல், உறவினர்களைச் சந்திக்கும் நாள்.

நேரங்கள் சென்னை சூரிய உதயப்படி, திருக்கணித முறை. உங்கள் ஊருக்கு அன்றைய நாள் பக்கத்தில் ஊரைத் தேர்ந்தெடுங்கள். கோயில் நிகழ்ச்சி நேரங்களைக் கோயில் அறிவிப்பில் உறுதி செய்யுங்கள்.

தைப்பொங்கல் போன்ற விசேஷ நாட்களுக்கு முந்தைய நாள் நினைவூட்டல்: TamilQ app, இலவசம். Google Play-ல் பதிவிறக்கவும்